சில சமயம் உங்களுக்கு email மூலமாக அதாவது மின்னஞ்சல் சேவையை வழங்கும் நிறுவனத்தின் நிர்ணயிக்கப்பட்ட கோப்பின் அளவைவிட பெரிய அளவில் அனுப்பவேண்டிய தேவை ஏற்படலாம்.இதற்கு இரு வழிமுறைகள் உள்ளன.
1 WINRAR
2 HJSPLIT
முதலில் வின்ரார் (WinRAR) மூலமாக எப்படி என்பதை பார்ப்போம்.
1)முதலில் சுருக்கப்பட வேண்டிய ஃபைலை(File) அல்லது போல்டரை(Folder)
தெரிவு செய்யவும்.பின்னர் அதனை வலது கிளிக் பண்ணவும்.அதன்போது பின்வரும் மெனு ஒன்று தோன்றும்.அதில் Add to archive. என்பதை கிளிக் பண்ணவும்.
2) வின்ரார் ஆனது ஃபைலின் பெயரை சுருக்கப்படவேண்டிய ஃபைலின் பெயராக நிர்ணயித்துவிடும்.நீங்கள் விரும்பினால் உங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சு செய்யலாம்.
3) பின்பு Split to volumes எனும் லேபிளை அவதானிக்கவும்.அதற்கு கீழே உள்ள லிஸ்ட் பொக்சில் பல தெரிவுகள் உள்ளன.இதிலுள்ளதெரிவுகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் விரும்பினால் தெரிவு செய்யலாம் அல்லது உங்களுக்கு தேவையான ஃபைலின் ஆகக்கூடிய அளவினை தட்டச்சு செய்யவும்.இங்கு 5mb என்று தட்டச்சு செய்துள்ளேன்.பின்பு OK பட்டினை கிளிக் பண்ணவும்.
4)வின்ரார் ஆனதுசில செக்கன்களில் ஃபைலை சிறுசிறு துண்டுகளாக பிரித்துவிடும்.
தொடரும்...




No comments:
Post a Comment