/*Start Read more Tag*/ /* End*/

Tuesday, September 28, 2010

4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு - நன்றி ரவிச்சந்திரன்

தமிழில் அடுத்த தலைமுறை தொழிநுட்பம் பற்றிய கட்டுரை இது.திரு ரவிச்சந்திரன் அவர்கள் இது பற்றி எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கியிருக்கின்றார்கள்.

நான் தொலை தொடர்புத்துறை(Telecommunications)யில் அடுத்த தலைமுறை கட்டமைப்பு(Next Generation Network)என்ற வருங்கால தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறேன். என் துறை சார்ந்த 4G Network பற்றி ஒரு சிறிய அறிமுகம். இப்பத்தான் 50,000 ஆயிரம் கோடி 2G Spectrum ஊழல் எல்லாம் ஒரு வழியாக அடங்கி... 3G ஏலம் முடிஞ்சி... 3G சேவைகளுக்காக காத்துக்கிட்டிருக்கோம். நீ என்னடான்னா... அதுக்குள்ள... 4G-ன்னு என்னமோ சொல்ற? என்று ஒரு சிலர் நினைப்பது எனக்கு புரிகிறது:)

Sunday, September 19, 2010

உங்கள் கோப்புகளை சிறு துண்டுகளாக மாற்றுவது எப்படி?

சில சமயம் உங்களுக்கு email மூலமாக அதாவது மின்னஞ்சல் சேவையை வழங்கும் நிறுவனத்தின் நிர்ணயிக்கப்பட்ட கோப்பின் அளவைவிட பெரிய அளவில் அனுப்பவேண்டிய தேவை ஏற்படலாம்.இதற்கு இரு வழிமுறைகள் உள்ளன.

1 WINRAR 
2 HJSPLIT

முதலில்  வின்ரார் (WinRAR) மூலமாக எப்படி என்பதை பார்ப்போம்.

1)முதலில் சுருக்கப்பட வேண்டிய ஃபைலை(File) அல்லது போல்டரை(Folder)
  தெரிவு செய்யவும்.பின்னர் அதனை வலது கிளிக் பண்ணவும்.அதன்போது பின்வரும் மெனு ஒன்று தோன்றும்.அதில் Add to archive.   என்பதை கிளிக் பண்ணவும்.